அருள்வாக்கு இன்று

ஜூன் 28-சனி

இன்றைய நற்செய்தி

லூக்கா 2: 41-51

புனித மரியாயின் மாசற்ற இருதயம்
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

புனித மரியாயின் மாசற்ற இருதயம்
அருள்மொழி:

வார்த்தை வாழ்வாக:

இயேசு இறைவனுக்குரிய மனநிலையில் இறைத் தந்தையின் திருவுளம் தான் தன் வாழ்வின் முதன்மை என்பதை வெளிப்படுத்தினார். அன்னை மரியாவின் இதயம் இயேசுவின் மனித இறை இயல்பை ஏற்றுக்கொண்ட இதயம். எனவேதான் தன் மகனையே அவ்வுலக மீட்பிற்காகச் சிலுவையிலே பலியாகக் கொடுக்கும் அளவுக்குத் துணிந்த இதயமாக மாறியது. ஒரு தாய்க்கு மிகவும் கொடுமையான ஒரு நிகழ்வு என்றால் தன்னுடைய மகனின் இறப்பை பார்ப்பது. அந்த நிலைதான் அன்னை மரியாவுக்கும் வந்தது. ஆனால் அன்னை மரியாவின் இதயம் இயேசுவின் இதயத்தைப் போலத் தியாகம் நிறைந்த இதயமாகவும் மாசற்ற இதயமாகவும் இருந்ததால் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நல்ல இதயமாக இருந்தது.

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் அன்னை மரியாவின் இதயத்தைப் போல நம்முடைய இதயமும் மாற நம்மை முழுமையாகக் கடவுளிடம் ஒப்படைப்போம். அன்னை மரியாவின் நல்ல நற்பண்புகளை நம்முடைய வாழ்வின் மதிப்பீடுகளாக மாற்ற முயற்சி செய்வோம். அன்னை மரியாவின் மாசற்ற இதயம் இவ்வுலகிற்கு மீட்பையும் மாற்றத்தையும் கொடுத்தது. எனவே நாமும் கடவுளின் மீட்பு இந்த உலகத்தில் அனைவருக்கும் கிடைக்கப் பெற அன்னை மரியாளைப் போல நல்ல இதயமாக மாறுவோம். தாய்க்குரிய மனநிலையில் நம்மோடு வாழக்கூடிய எல்லா மனிதர்களையும் அன்பு செய்ய முயற்சி செய்வோம். அவ்வாறு வாழும்பொழுது நம் வாழ்விலே முழுமையில் அன்னை மரியாவைப் போலப் பெற முடியும்.

சுயஆய்வு

  1. மரியாளைப் போல் அடுத்தவர்களைக் கரிசணை அன்போடு நடந்துகின்றேனா?
  2. என் அன்பு எப்படிப்பட்டது? மரியாளின் அன்பைப் போன்றதா?

இறைவேண்டல்

அன்பின் இதய ஆண்டவரே! அன்னை மரியாவின் மாசற்ற இதயப் பெருவிழாவை கொண்டாடும் இந்த நாளில் அன்னை மரியாவைப் போல எங்கள் இதயத்தையும் மாற்றும். நல்ல மனதை எங்களுக்குத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு