அருள்வாக்கு இன்று
ஜூன் 26-வியாழன்
இன்றைய நற்செய்தி
மத்தேயு.7: 21-29

மத்தேயு.7: 21-29
நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மத் 7:24
இன்றைய அருள்வாக்கு மூலம் இயேசு நாம் பாறையின் மீது கட்டிய வீட்டைப்போல்வாழ அழைப்பு விடுக்கிறார். நம்மில் பலர் ஆழ்ந்த விசுவாசகுறைவால் அங்கும் இங்கும் அலைந்து சீர்கெட்டுத் தன்னிடம் உள்ளதையும் தொலைத்து விட்டு நிர்கதியாய் நிற்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.பிறசபையினர் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இது செல்பவர்களின் மன இறுக்கம் தான் காரணம் செல்கின்ற சபையில் கொஞ்ச நேரம் கத்தித் தங்கள் இறுக்கங்களைக் கொட்ட அழுதபிறகு கொஞ்சம் நிம்மதி என்று நினைத்து ஒடிக்கொண்டிருக்கின்றார்கள். இது நிரந்தரமல்ல. தனிமையில் அமைதியில் இறைவனை உணர்வுபூர்வமாகத் தரிசிப்பதே சிறந்த வழி. இதுவே பாறையின் மேல் கட்டப்பட்ட வீடு இதையே இயேசு விரும்புகின்றார். உணர்வுபூர்வமாக இறைவனோடு உரையாட வேண்டும். உணர்ச்சியினால் கத்தி ஆடுவது செபமல்ல. அறீவீர்.
அன்பு ஆண்டவரே! எங்களுக்கு உறுதியான விசுவாசத்தை ஆழப்படுத்த வரம் தாரும். ஆமென்.