அருள்வாக்கு இன்று

ஜூன் 25-புதன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு.7:15-20

மான்டி வெர்ஜின் புனித வில்லியம்
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? மத்தேயு.7:16

வார்த்தை வாழ்வாக:

அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். இஃது இயேசுவின் வார்த்தைகள், இன்று சமுதாயத்தில் எதிரொலிக்கின்றன. 'விளையும் பயிர் முளையிலே தெரியும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பது போல், ஒருவரது செயல்களைக் கொண்டு அவர் எதிர்காலத்தை அறியலாம். சிறுவயதில் புனித தொன்போஸ்கோ இளைஞர்கள்மீது அதிகக் கவலையும், அக்கறையும் கொண்டிருந்தனால் தான், தான் குருவானபிறகு இளைஞர்களுக்காகவே தன் வாழ்நாளைச் செலவழித்தார். எனவே நாமும் நமதுபிள்ளைகள் எதிர்காலம் நல்லமுறையில் அமையச் சிறுவயது முதலே அவர்களை இறைபற்றில் வளர்க்க அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

சுயஆய்வு

  1. நான் சிறுகுழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றேனா?
  2. சிறுபிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு வளர்க்கின்றேனா?

இறைவேண்டல்

மரத்தைக் கொண்டே அதன் கனியை அறியலாம் என்று உரைத்த இயேசுவே! இளைய சமுதாயத்தைச் சிறுவயது முதலே ஞானவாழ்வில் வளர்த்திட அருள் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு