அருள்வாக்கு இன்று

ஜூன் 24-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

லூக்கா 1:57-66, 80

திருமுழுக்கு யோவான் பிறப்பு பெருவிழா
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, “இக்குழந்தையின் பெயர் யோவான்” என்று எழுதினார். லூக்கா 1:63

வார்த்தை வாழ்வாக:

திருச்சபை வழிபாட்டில் பிறந்த நாள் விழா கொண்டாடுவது இவர்களுக்கு மட்டுமே! இயேசு, மரியாள், திருமுழுக்கு யோவான் ஆவார்கள். ஏனெனில் எலிசபெத், அன்னை மரியாள் சந்திப்பில் தாயின் கருவிலேயே அக்களிப்பால் தூயஆவியின் ஆற்றலால் சங்கமித்துக் கொண்டவர் யோவான். இயேசுவின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். இவரின் பெயர் சூட்டுவிழா ஒரு புதிராக இருந்தது. அதுவே இறைதிட்டமாக இருந்தது. ”யோவான்" என்றால் “கிருபை" என்று பொருள். மீட்பின் வரலாற்றில் இறைவனின் கிருபைப் பெறத் திருமுழுக்கு வழியாக மக்களைத் தயாரித்தவர், இறைவாக்கினராகச் செயல்பட்டவர். அதேபோல் திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவருக்கும் இறைவனில் ஒரு திட்டம் உள்ளது. அதை நிறைவுப் பெறும்போது தான் நம் வாழ்வின் நிறைவுகளைக் காண முடியும்.

சுயஆய்வு

  1. நாம் பிறந்த நாளை எந்த நோக்கத்துடன் கொண்டாடுகிறேம்?
  2. என் வாழ்வில் இறைவன் என்னுள் வைத்துள்ள இறைத்திட்டத்தை அலசிப் பார்க்கின்றேனா?

இறைவேண்டல்

தந்தையே இறைவா! திருமுழுக்கு யோவானின் பிறப்பு மூலம் இவ்வுலக மாந்தரின் மீட்புக்கு முன் உதாரணமாகப் பிறந்தார். அதேபோல் நாங்களும் அடுத்தவரின் துன்பத்தில் பங்கெடுக்கும் நல்மனதினை தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு