அருள்வாக்கு இன்று

ஜூன் 23-திங்கள்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 7:1-5

புனித ஜோசப் கஃப்பாசோ
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும். மத்தேயு.7:5

வார்த்தை வாழ்வாக:

பல சமயங்களில் நம் குடும்பங்களில் பல பிரச்சனைகள் உண்டு. ஆனால் நாம் அதைச் சரிசெய்து போல் பாவனை செய்து மூடிவைத்துவிட்டு, பிறருக்கு தீர்ப்பளிக்கும் நிலை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. ஆனால் நாம் ஒரு செயலைச் செயயும்போது பலமுறை சிந்தித்து நல்லதா-தீயதா என்று முடிவெடுத்த பிறகே, அச்செயலை செய்ய வேண்டும். சுயநலம் மறந்து பிறர்நலம் பேண முயல வேண்டும். நம் குறைகளை முதலில் கலைந்துவிட்டு பிறர் நிலையை அறிய முற்பட வேண்டும். அடுத்தவர் குறையை நீக்கி, நிறைவை சுட்டி காட்டும்போது பிறநலம், பிறரன்பு மேலோங்கும்.

சுயஆய்வு

  1. பொது ஒழுங்கையும், சட்டங்களையும் நாம் மதிக்கிறோமா?
  2. நீதி நேர்மை கடைப்பிடித்து அடுத்தவர்களக்கு உரைக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! அனைவரிலும் உம்மையே காணவும், மற்றவரைத் தீர்ப்பிடாமலும் என்னை மாற்றி வாழும் வரம் தாரும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு