அருள்வாக்கு இன்று
ஜூன் 22-ஞாயிறு
இன்றைய நற்செய்தி
லூக்கா 9-11-17

லூக்கா 9-11-17
அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். லூக்கா: 9:17
இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களோடு பெத்சாய்தா என்ற ஊருக்கு வந்தார். இயேசுவை கண்டதும் திரளான மக்கள் அவரைத் தேடி வந்தனர். அனேகரைக் குணப்படுத்தினார். அது பாலைநிலம். பொழுது சாயவே திரளான மக்கள் கூட்டம் பசியாற எதுவும் இல்லை. ”எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்கள் மட்டுமே உள்ளன” என்றனர். இயேசு ”நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்று கூறி ஐந்து அப்பங்களையும் இரண்டுமீன்களையும் கையில் எடுத்து வானத்தை அண்ணார்ந்து பார்த்து ஆசிகூறி பந்தியில் ஐம்பது பேராக அமரச் செய்து பரிமாறும்படி கூறினார். அனைவரும் வயிறார உண்டபின் பன்னிரெண்டு கூடைகளில் சேகரித்தனர். இவ்வாறே தனது கடைசி இராவுணவின்போது தம் சீடர்களின் பாதங்களைக் கழுவி, அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் அவர்களுக்கு அளித்து ”இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்று தன் உடலையே நமக்கு ஆன்ம உணவாகக் கொடுத்து ”உலகம் முடியும் வரை உங்களோடிருப்பேன்” என்றவரின் திருவுடல் திருஇரத்த விழாவை இன்று கொண்டாடி மகிழ்கின்றோம்.
அன்பு இயேசுவே! உமது உடலை எங்கள் ஆன்ம உணவாகப் பெற்றிட வரம் தாரும். ஆமென்.