அருள்வாக்கு இன்று

ஜூன் 21-சனி

இன்றைய நற்செய்தி

மத்தேயு.6:24-34

புனித அலோசியஸ் கொன்சாகா
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். மத்தேயு: 6-33

வார்த்தை வாழ்வாக:

நமது வாழ்வில் முதலில் மாற்றம் காண வேண்டும். எனவே தினசரி திருப்பலி, திருயாத்திரை, செபக்கூட்டம், தினசரி விவிலியம் என்று வாசித்தும் செபித்தும் நம்மிடம் மாற்றம் இல்லையே என்று பலர் ஏங்குவார்கள். மாற்றம் என்பது நாம் பிடித்துக் கொண்டிருக்கும் இவ்வுலகச் சுகங்களைத் துறந்து “தான்" என்ற அகந்தை அழிந்து மற்றவருக்காக வாழ்வது தான். இறைமகன் தன்னையே இழிந்து இவவுலகை மீட்டார். அதுபோல் நாமும் இவ்வுலகப் பற்றினை விட்டு நம்மையே இழக்கும்போது இறைவனைத் தரிசிக்க முடியும். நிறைவாழ்வு அடைய முடியும்.

சுயஆய்வு

  1. என்னில் மாற்றம் காண என் உள்ளம் தயாராக உள்ளதா?
  2. அதற்கான மனதை என்னிலிருந்து உருவாகின்றதா?

இறைவேண்டல்

இவ்வுலகமானிடருக்காகத் தன்னையே இழந்த இயேசுவே! உம்மைப் போல அனைத்தையும் இழந்து உம்மைப் பற்றிக் கொள்ளும் மனதினை தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு