அருள்வாக்கு இன்று
ஜூன் 20-வெள்ளி
இன்றைய நற்செய்தி
மத்தேயு 6:19-23

மத்தேயு 6:19-23
உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். மத்தேயு 6:21
நமக்குப் பிடித்தமானவைகள் எங்குள்ளதோ அந்த இடத்தில் தான் நம் உள்ளமும் இருக்கும். ஆனால் நாம் இவ்வுலகில் சேர்க்கின்ற பொன்னோ, பொருளோ எதுவும் நம் ஆன்மா இவ்வுலவை விட்டுப் பிரியும்போது நம்மோடு வருவதில்லை. இவ்வுலகில் என்னென்ன நல்ல காரியங்கள் செய்தோமோ, இவையே நாம் இறந்தபிறகும் இறைவனிடம் நம்மை அழைத்துச் செல்லும் பொக்கிஷம். இவ்வுலகில் சேர்க்கும் பொருட்களுக்குத் திருடனும் பூச்சிகளும் அழித்துவிடும். ஆனால் வறியோருக்கும், கைம்பெண்களும் செய்யும் உதவியே நமக்கு முன் இறைவனிடம் சென்றடையும் என்பதை மறவாதீர்கள். அதுவே நிறை வாழ்வு!
மூவுலகின் மூலவரே! எம் இறைவா! அழிந்துபோகும் பொருள்களைத் தவிர்த்து அழியாச் செல்வமாகிய விண்ணக அரசை யாம் அடையும் வரத்தை இறைவா உம்மிடம் வேண்டுகிறோம். ஆமென்.