அருள்வாக்கு இன்று
ஜூன் 19-வியாழன்
இன்றைய நற்செய்தி
மத்தேயு. 6:7-15

மத்தேயு. 6:7-15
நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார். மத்தேயு 6:8
இறைவன் நம்மை அமைதியான சூழலில் செபிக்க அழைக்கிறார். எவ்வாறு அமைதியில் செபிப்பது? நாம் கதவை அடைத்துக் கொண்டு தனிமையில் இறைவனிடம் மன்றாடுவதாக நினைத்துக்கொண்டு தனிசெபம் செய்கிறோம். அப்படி அல்ல இறைமகன் கூறுவது. அதாவது நமது ஐம்புலன்களையும் அடக்கி அகத்தில் ஆழ்ந்து இறைவனைத் தேடும்போது திருமுழுக்கினால் குடியேறியத் தூய ஆவி நமக்குள் உறைந்திருப்பது நன்கு உணர முடியும். அகத்தில் உள்ள இறைவனோடு ஐக்கியமாக வேண்டுமென்றால் ஐம்புலன்களையும் இவ்வுலகமாயைகளையும் கடந்து அகபயணம் மேற்கொள்ளும்போது நாம் இறைவனில் ஐக்கியமாவோம். அதன் சுகமே தனி. நாம் இறைவனில் ஒன்றிக்கும்போது, நமது தேவைகள் என்ன வென்பதை நம் தந்தை நாம் கேட்டுமுன்னரே வழங்கிடுவார்.
அன்பு இறைவா! நீர் எங்கும் நிறைந்திருக்கின்றீர் என்பதை மறந்து வாழும் நிலையிலிருந்து நாங்கள் விடுபட்டு அமைதியில் துதிக்கும் வரம் தாரும். ஆமென்.