அருள்வாக்கு இன்று
ஜூன் 18-புதன்
இன்றைய நற்செய்தி
மத்தேயு 6:1-6,16-18

மத்தேயு 6:1-6,16-18
நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். மத்தேயு 6:3
இன்றைய சமுதாயத்தில் அநேகர் புகழுக்கும், பெயருக்கும் தர்மம் செய்பவர்களே உள்ளனர். வறுமையிலும், தேவையிலும் உழன்று கொண்டிருப்பவர்களுக்குக் கொடுப்பதற்கு அதுவும் ஐந்தோ, பத்தோ தயங்குவார்கள். தங்களுக்குப் பெயரும் புகழும் கிடைக்கப் பொது இடமாக இருந்தால் தன்னை அனைவரும் புகழ வேண்டும். தன் பெயர் பெரியளவில் பேச வேண்டும் என்ற நோக்கில் பல ஆயிரங்களை, இலட்சங்களைக் கொடுத்துத் 'தம்பட்டம்" அடித்துக் கொள்வார்கள். அதேபோல் பங்குதளங்களில் குருவானவர் அருகிலிருக்க வேண்டும், அதற்காக உதவிசெய்து பங்கு மக்களிடையே "பெரியாள்" என்ற பெயர் எடுக்க வேண்டும் என்று எண்ணுபவர்களும் பலர் உண்டு. ஆனால் இயேசுவே உன்னை நம்பிவந்து கேட்கும் ஏழை எளியோர்களுக்கு மனம்கோணமால், முழுமையாக இன்முகத்தோடு மற்றவர் பார்க்காமல் உதவி செய்யுங்கள். இத்தகையோரின் தர்மத்தை மறைவாயுள்ள தேவன் காண்கின்றார். அதற்காகக் கைம்மாறு உனக்கு மிகுதியாகத் திடைக்கும். என்கிறார். ஏற்போமா?
கருணைக் கடலே எம் இறைவா! அடுத்தவரின் குறிப்பாக நலிந்தோரின் நலன்களில் நான் முழுமையாக அர்ப்பணித்து வாழும் அருள் வரத்தினைத் தாரும் ஆமென்.