அருள்வாக்கு இன்று

ஜூன் 17-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 5: 43-48

புனித ஹார்வி
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்: உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். மத்தேயு 5:44

வார்த்தை வாழ்வாக:

இயேசுவின் இன்றைய அருள்மொழிச் சற்றுக் கடைபிடிப்பது கடினம் தான் இருப்பனும் இயேசு இங்கே அன்பு செய்வோருக்கு அன்பும், உதவிபுரிவோருக்கு உதவியும் செய்வது சாதரணச் செய்தி. கைமாறு எதிர்பாராமல் செய்கின்ற உதவியே சிறந்தது. சற்று ஒருபடி மேலே சென்று கவனித்தால் இயேசு சிலுவையில் தன் கடைசி முச்சு அடங்கும் நிலையில் தன்னைக் கொலை செய்தவர்களுக்காக “தந்தையே இவர்களை மன்னியும்.” என்றார். இயேசு இறைமகன் அதனால் அது சரி என்று கேட்பவர்களும் நம்மிடையே உள்ளார்கள். உதாரனமாகத் தன்னைத் துப்பாக்கியால் சுட்டவனை மறைந்த திருதந்தை ஜான்பால் மன்னிக்கவில்லையா? எனவே இயேசுவின் வாழ்க்கையை நமதாக்கித் தடம் பதிப்போமா?

சுயஆய்வு

  1. எனக்கு மன்னிக்க முடியாத அளவுப் பகைவர்கள் உண்டா?
  2. அப்படியிருந்தால் அவர்களை மன்னிப்பது எப்படி?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! என் பகைவர்களை மன்னிக்கும் தாராள மனதினைத் தாரும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு