அருள்வாக்கு இன்று
ஜூன் 16-திங்கள்
இன்றைய நற்செய்தி
மத்தேயு 5:38-42

மத்தேயு 5:38-42
தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மத்தேயு. 5:39
வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் அன்பு காட்டுபவரே, நமக்கு எதிராய் தீமைச் செய்வார்கள் அத்தகையோரை காணும்போது வெறுப்பும் பழிஉணர்வும் ஏற்படத்தான் செய்யும். அதையே இயேசு நம் உணர்வுகளுக்கு மாற்று வழியை முன் வைக்கின்றனார். அதுவே தவறுச் செய்பவர்களை மன்னிப்பது. அவர்களுக்காகச் செபிப்பது அவர்கள் துன்ப வேளையில் ஆறுதலாக இருப்பது. இப்படிபட்ட செயல்களே, கொடியவராக இருப்பினும் அவர்களை மாறச் செய்யும். இதையே வள்ளுவர் “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்.” என்று இக்கருத்தை வலியுறுத்துகின்றார். எனவே நாமும் பிறர் தீமைகளை மன்னிப்போமா? அப்போது தான் நம் குற்றங்களும் மன்னிக்கப்படும்.
மன்னிக்கும் பரம்பொருளே! எம் இறைவா! பிறர் தீமைகளை முழுமையாக மன்னிக்கக்கூடிய எளிய மனதினை அருள வரம் தாரும் ஆமென்