அருள்வாக்கு இன்று
ஜூன் 15-ஞாயிறு
இன்றைய நற்செய்தி
யோவான் 16:12-15

யோவான் 16:12-15
”தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்” என்றேன். யோவான் 16:15
இன்றைய நற்செய்தியில் தூய ஆவியாரின் வழியாக இயேசுவின் மாட்சிமை வெளிப்படும் என்பதை நமக்கு உணர்த்துகின்றார். எப்படிஎனில் தூய ஆவியானவரின் நிழல் அன்னை மரியின் கருவில் நிழலிட்டது. முழுக்க தூயஆவியின் ஊடுருவலும், தந்தையின் தூதர் அறிவித்த மங்கல செய்தியும் மாமரி ழுழமையாக ஏற்றுக் கொண்டமையின் வெளிப்பாடே இயேசுவின் பிறப்பு. எனவே தான் தூயஆவி இறைமக்களிமிடருந்தே நமக்குப் பெற்று தருகின்றார். நாம் சுவாசிககும் உயிர் மூச்சே தூயஆவி தானே!
அன்பு இயேசுவே! மூவொரு இறைவனை உணரும் வரம் தாரும். ஆமென்