அருள்வாக்கு இன்று

ஜூன் 12-வியாழன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 5:20-26

புனித சகாகுன் ஜான்
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அப்போது இயேசு, "மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும் என்றார்.” மத்தேயு 5:26

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, பெத்தானியாவுக்குச் சென்றார். இலாசர், மார்த்தா, மரியா இல்லம் அங்கு இருந்தது. அங்கு அவருக்கு விருந்து ஏற்பாடுயிருந்தது. யூதர்கள் வழக்கபடி அவரது கால்களைக் கழுவிட மரியா விலையுர்ந்த நறுமணத் தைலத்தைக் கொண்டு அவரது கண்ணீரால் கழுவி, நறுமணத்தைலத்தால் பூசித் தன் கூந்தலால் துடைத்துக்கொண்டிருந்தார். இதனைக் கண்ட யூதாசு இதனை விற்றால் எழைகளுக்குக் கொடுக்கலாமே என்றதும் இயேசு அவர்களைத் தடுக்க வேண்டாம் என் ஆயத்த நாளை முன்னிட்டு இவர் இதைச் செய்யட்டும் என்று ஏற்றுக் கொள்கின்றார். காரணம் மரியா ஒரு பாவியாக வாழ்ந்தவர். அவர் தன் தவறை உணர்ந்து மனம் வருந்திக் கண்ணீர் விட்டு அவரது பாதங்களைக் கண்ணீரால் கழுவித் தன் கூந்தலால் துடைத்த தன் பாவங்களுக்குப் பரிகாரம் பெற்று இன்று வரை விவிலியத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

சுயஆய்வு

  1. நான் என் பாவங்களை நினைவுக் கூர்கிறேனா?
  2. அதற்காக மனம் வருந்தி மன்னிப்புப் பெறுகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமக்கு எதிராக நான் செய்த பாவங்களை நினைவுக் கூர்ந்து மன்னிப்பு பெற்றிடும் வரம் தாரும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு