அருள்வாக்கு இன்று

ஜூன் 11-புதன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 10:7-13

St. Barnabas
புனித பர்னபாஸ்
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்: அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அஃது உங்களிடமே திரும்பி வரட்டும். மத்தேயு 10:13

வார்த்தை வாழ்வாக:

இறையாட்சியின் மதிப்பீடுகளைச் சமுதாயத்தில் மற்றவாகளோடு பகிர்ந்துக் கொள்ளவே இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார். நாம் நற்செய்தியின் பொருட்டு அடுத்தவருக்கு அளிக்கின்ற அமைதியின் வாழ்த்து தகுதியுள்ளவருக்கே அதுபோய்ச் சேரும். தகுதியற்றவர்களாக இருந்தால் அந்த வாழ்த்து மீண்டும் நம்மிடமே வந்து சேரும். என்று நற்செய்தியின் நாயகன் நமக்கு அறைகூவல் விடுக்கின்றார். எனவே நம் புனித சவேரியார் தமிழகக் கரையோர மக்களைத் திருச்சபையில் இணைத்தார். திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் இறைவனால் இப்பணிக்காக அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை மனதில் பதித்துச் செயல் காட்டுவோம். திருச்சபைக்குச் சான்று பகிர்வோம்.

சுயஆய்வு

  1. நற்செய்தியைச் சாதி, மத, இனங்களைக் கடந்து சென்று பறைசாற்றுகிறேனா?
  2. தன்னலம் கருதாதுப் பிறர்நலம்பேண என்னை நான் அர்ப்பணிக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பான இயேசுவே! உமது வருகையால் இப்புவி அமைதிகண்டது மாறி வருகின்ற கலாச்சாரங்களில் உம் மக்கள் சிதறுண்டுப் போகமால் அமைதியோடு வாழும் வரம் அருள மன்றாடுகின்றோம். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு