அருள்வாக்கு இன்று
ஜூன் 10-செவ்வாய்
இன்றைய நற்செய்தி
மத்தேயு 5:13-16

மத்தேயு 5:13-16
நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்: வேறு ஒன்றுக்கும் உதவாது. மத்தேயு 5:13-16:5-13
நோவா முதல் மோசே வரை அவர்களைத் தொடர்ந்து திருத்தூதர்களும் எண்ணற்ற புனிதர்களும் சற்று வேறுபட்டவர்களாக வாழ்ந்து புதுமை கண்ணேட்டத்துடன் உலகத்தை மாற்றி அமைக்கத் தங்களையே அர்ப்பணித்தனர். ஆனால் "இயேசு" இந்த உலகை புதுபடைப்பகாக மாற்ற 12 சீடர்களைத் தெரிந்துகொண்டார். இன்றைய சூழலில் நாம் எவ்வாறு சுவை சேர்க்கும் உப்பாக மாறப் போகின்றோம்? நாம் நிகழ்காலத்தில் இருக்கின்றறோம். இயேசு இன்று அனைவரையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். எவ்வாறு எனில் நம் அருகிலிருக்கும் அயலானின் துயர்துடைத்து, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும்போது, இவ்வுலகம் புதிய படைப்பாக மாறும் இதுவே புதிய விண்ணகம் மலரும்.
ஆதியில் இறைவன் மனிதனை படைத்து அவனை உயர்த்திச் சிகரமாகக் கண்டார். இன்று பாவத்தினால் பரிதவிக்கும் மக்களை மீட்டெடுக்க இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார். வாருங்கள் அவருடன் செல்வோம்.
புத்துலகம் படைக்க எனை;ன அழைக்கும் இயேசுவே! உமது அழைப்பை ஏற்று உன் பணி செய்ய அருள்தரும். ஆமென்.