அருள்வாக்கு இன்று

ஜூன் 9-திங்கள்

இன்றைய நற்செய்தி

யோவான் 19: 25-27

திரு அவையின் அன்னை
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். யோவான் 19: 27

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் இறுதி மூச்சை நிறுத்தும் முன்னர்த் தன் தாயைப் பார்த்து அம்மா “இவரே உன் மகன்” என்றும் தன் அன்புச் சீடர் யோவானைப் பார்த்து “இவரே உம் தாய்” என்று வார்த்தைகள் வியாகுலம் நிறைந்த அன்னையாக நமக்குப் பதிமூன்றாம் நிலையில் காட்சியளிக்கின்றார். தம் அன்பு மகனை மடியினில் சுமந்து, பெற்று, சீராட்டி, பாலுட்டி 33ஆண்டுகள் அவர் செய்த அருஞ்செயல்களையெல்லாம் மனதில் நிறுத்திச் சிந்தித்து வந்த மரியா துயர மிகுதியால் மார்புப் பிளந்து விலாச் சிதறி வியாகுலம் நிறைந்த அன்னையாகக் காட்சித் தந்த நாளை நமது தாய்திருச்சபைக் கொண்டாடி நினைவுட்டுகிறது. ஆம் அன்பர்களே! யோவான் இறுதி வரை பயணித்த ஒரே சீடர். அவரது நற்செய்தியும், திருமுகங்களும், திருவெளிப்பாடும் அவரது இறைமகனோடு கொண்டிருந்த நெருக்கத்தையும் இயேசுவின் பழைய-புதிய ஏற்பாட்டின் முழுமையைத் திருவெளிப்பாடு என்று நூலில் இறைவனால் வெளிபடுத்தியுள்ளார் என்பதே உண்மை.

சுயஆய்வு

  1. வியாகுலான்னையின் துயரை அறிகிறேனா?
  2. கிறிஸ்துவின் திருவெளிப்பாடு உணர்த்தும் செய்தியை அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது வியாகுலம் நிறைந்த தாயின் மடியில் நானும் வாழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு