அருள்வாக்கு இன்று

ஜூன் 8-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

யோவான் 14:15-16,23-26

தூய ஆவியார் பெருவிழா
தூய ஆவியார் பெருவிழா
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

தூய ஆவியார் பெருவிழா
அருள்மொழி:

என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். யோவான் 14:26

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, உண்மையை நோக்கி வழித் துணையாளர் வருவார் என்று கூறியபடியே, தூய ஆவியாரின் பெருவிழாவை நமது திருஅவைக் கொண்டாடி மகிழ்கின்றது. உலகம் இயங்கும் வரையில் எந்நாளும் உங்களோடிருப்பேன் என்றவர், நற்கருணை வடிவிலும், புறா வடிவிலும் தூய்மையை நோக்கி வழிநடத்திட நம்மோடு வலம் வருகின்றார். தந்தை படைத்தவராகவும் - மகன் மானிடரை மீட்பவராகவும் - தூய ஆவியார் நம்மை உண்மையை நோக்கிப் பராமரிப்பவராகவும் மூவொரு இறைவன் எவ்வாறு நம்மைக் காக்கின்றார் என்பதற்குச் சான்றுகளாக அமைவதை நாம் உணர்ந்துச் சுவைத்து, இறை-மனித உறவில் சங்கமித்து, நல் சாட்சிகளாக வாழ்ந்திட தூய ஆவியாரின் பெருவிழா நமக்கு உற்சாகம் அளித்து நம்மை வழிநடத்துகிறார் என்பதை உணர்ந்து வாழ்வோம்.

சுயஆய்வு

  1. தூய ஆவியாரை உணர்கின்றேனா?
  2. அவரில் இரண்டறக் கலக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே, தூய ஆவியாரில் என்றென்றும் இயங்கிடும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு