அருள்வாக்கு இன்று
ஜூன் 2-வெள்ளி
இன்றைய நற்செய்தி
யோவான் 21: 15-19

யோவான் 21: 15-19
பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்த போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், "என்னைப் பின் தொடர்" என்றார். யோவான் 21:19
இன்றைய நற்செய்தியில், உயிர்த்த இயேசு, பேதுருவை நோக்கி, “என்னை நீ அன்பு செய்கிறாயா?” என்று மும்முறை கேட்டு, அவரது அன்பைப் பரிசோதிக்கின்றார். மீன் பிடிப்பவராகிய பேதுருவை, “என்னைப் பின் செல். உன்னை ஆடுகளைப் பிடிப்பவராக்குவேன்” என்றவர், திருஅவையின் தலைவராகவும், தன் மண்ணக வாழ்விற்கு அப்பாலும் இயேசு விண்ணகம் சென்றபிறகும், பேதுரு தன் இறப்பினால், அதாவது தலைகீழாகச் சிலுவையில் அறையுண்டு மரிப்பார் என்பதை, “என்னைப் பின் செல்” எனும் வார்த்தைகளில் இறைமகன் பதிவு செய்கின்றார். பேதுருவின் இறப்பு முக்காலத்திற்கும் எதிரொலிக்கும் உயிர் அலைகளாகும். பேதுருவின் இவ்வுலக வாழ்வினின்று இறந்து கடவுளை எவ்வாறு மாட்சிப்படுத்த போகிறார் என்பதற்கு இறைமகன் முன்கூட்டியே அறிவிக்கின்றார்.
அன்பு இயேசுவே, பேதுருவைப் போன்று உம் வாக்கின்படி வாழும் வரம் தாரும். ஆமென்.