அருள்வாக்கு இன்று
ஜூன் 5-வியாழன்
இன்றைய நற்செய்தி
யோவான் 17:20-26

யோவான் 17:20-26
நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை.ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்து கொண்டார்கள்.யோவான் 17:25
இன்றைய நற்செய்தியில் இயேசு மானிடருக்காகத் தந்தையிடம் வேண்டுகிறார். நம்பிக்கைக் கொண்டோர் அனைவரின் வாழ்வு மலர்ந்திட இறைவேண்டல் செய்கிறார். சாதி-மதம்-இனம்-மொழிஅடிப்படையில் பிளவுண்டு இருக்கும் அனைவரும் அஃதாவது எல்லோரும் ஒன்றாய் இருப்பார்களாகத் தந்தையே நீர் என்னுள்ளம் நான் உம்முள்ளும் ஒன்றித்திருப்பது போல எல்லோரும் ஒன்றாய் இருக்கவேன்டும் என்பதே உமது திட்டம். இதனை நின் மக்களுக்குத் தெளிவு படுத்துவதே என் பணி. தந்தையே உலக் தோன்றும் முன்னரே நீர் என்மீது அன்பு கொண்டிருந்தீர். என்னை மாட்சிமை படுத்தினீர். அவ்வாறே என்னிடம் ஒப்படைக்கப்பட்டவர்களும் என் மாட்சி காணுமாறு நான் இருக்கம் இடத்திலலேயே இருக்க வேண்டுமென்று தந்தையிடம் வேண்டுகிறார்.
அன்பு இயேசுவே! நீர் நீதியுள்ள தந்தையிடம் இணைந்து பணியாற்றுவது போல நானும் இறைபணி ஆற்றிடும் வரம் தாரும். ஆமென்