அருள்வாக்கு இன்று
ஜூன் 4-புதன்
இன்றைய நற்செய்தி
யோவான் 17:11-19

யோவான் 17:11-19
அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன். யோவான் 17:15
இன்றைய நற்செய்தியில் இயேசு, நமக்காகத் தந்தையிடம் மனம் உருகி வேண்டுகின்றார். நான் எப்படி உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல அவர்களும் உலகைச் சார்ந்தவர்களாய் இராதவாறு காத்தருளும். உண்மை எனும் அருட்கருவியினால் அவர்களைக் காத்தருளும். தந்தையே உமது வார்த்தையே உண்மை. அந்த உண்மை திருவுளத்தை நிறைவுச் செய்தது போல அவர்களும் உமது திட்டத்தின்படி உண்மையில் ஊன்றி அடுத்தவர்களை உண்மையின்பால் பயணிக்க எமது ஆவியாலை அவர்களுக்குப் பொழிந்தருளும். உண்மை ஒருபோதும் உறங்காது எனும் கருப்பொருளின் படி நான் இம்மானிடருக்காக அர்ப்பணமாகின்றேன். உமது திருவுளம் என்னில் நிறைவுரும் என்ற இறைமகன் வேண்டுகிறார்.
அன்பு இயேசுவே! உண்மையின் கருப்பொருளாக நீவீர் விளங்குவர் போல நானும் உண்மையை நோக்கிப் பயணிக்க வரம் தாரும். ஆமென்.