அருள்வாக்கு இன்று

ஜூன்16 - புதன்

இன்றைய நற்செய்தி

இன்றைய புனிதர்

St. John Francis Regis

புனித ஜான் பிரான்சிஸ் ரெஜிஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். மத்தேயு 6:3

வார்த்தை வாழ்வாக:

இன்றைய சமுதாயத்தில் அநேகர் புகழுக்கும், பெயருக்கும் தர்மம் செய்பவர்களே உள்ளனர். வறுமையிலும், தேவையிலும் உழன்றுக் கொண்டிருப்பவர்களுக்குக் கொடுப்பதற்கு அதுவும் ஐந்தோ, பத்தோ தயங்குவார்கள். தங்களுக்குப் பெயரும் புகழும் கிடைக்கப் பொதுஇடமாக இருந்தால் தன்னை அனைவரும் புகழவேண்டும் பெயர்பெரியளவில் பேசவேண்டும் என்ற நோக்கில் பல ஆயிரங்களை, இலட்சங்களைக் கொடுத்து "தம்பட்டம்" அடித்துக் கொள்வா ர்கள். அதேபோல் பங்குதளங்களில் குருவானவர் அருகிலிருக்க வேண்டும் அதற்காக உதவிசெய்துப் பங்கு மக்களிடையே " பெரிய ஆள் " என்ற பெயர்எடுக்கவேண்டும் என்று எண்ணுபவர்களம் பலர்உண்டு. ஆனால் இயேசுவே உன்னை நம்பிவந்து கேட்கும் ஏழை எளியோர்களுக்கு மனம்கோணமால், முழுமையாக இன்முகத்தோடு மற்றவர் பார்க்கமால் உதவி செய்யுங்கள். இத்தகையோரின் தர்மத்தை மறைவாயுள்ள தேவன் காண்கின்றார். அதற்காகக் கைம்மாறு உனக்கு மிகுதியாகக் கிடைக்கும். என்கிறார். ஏற்போமா?

சுய ஆய்வு

  1. பெயர், புகழுக்காகத் தர்மம் செய்கின்றேனா?
  2. ஏழை எளியோருக்காக உதவுகின்றேனா?

இறைவேண்டல்

கருணைக் கடலே எம் இறைவா! அடுத்தவரின் குறிப்பாக நலிந்தோரின் நலன்களில் நான் முழுமையாக அர்ப்பணித்து வாழும் அருள் வரத்தினைத் தாரும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு