அருள்வாக்கு இன்று

மே 13 - செவ்வாய்

இன்றைய நற்செய்தி

யோவான். 10:22-30

புனித பாத்திமா நகர் அன்னை மரியா
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கு அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன.

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு அன்று அடிமைகளாகவும், நோயுற்றவர்களாகவும் புறந்தள்ளப்படவர்கவும் இருந்த மக்களை நல்வழிபடுத்தி அவர்களுக்கு மீட்பை அல்லது விடுதலைப் பெற்றுத் தரவே இறைமகன் வந்தார். அவரை அவரது மக்கள் நன்கு அறிந்திருந்தார்கள். எனவே தான் கூட்டம் கூட்டமாக அவரது பின்னால் ஓடினார்கள். அன்று அவர்களது விசுவாசத்தைச் சோதித்துப் பார்க்க இறைமகன் நீங்கள் வயிறார உண்டதினால் என்னைப் பின் தொடர்ந்து வருக்கின்றீர்களா என்று கேள்வியை அவர்கள் முன் வைக்கின்றார். உண்மையான இறைமகன் நம்மை மீட்கவல்லத் தேவன் இன்றும் நம்மை அறிந்து கொண்டுள்ளார். ஆனால் இவ்வுலக ஆசைகளை நிலையான வாழ்வு என்று கருதி அவரது அழைப்பை உணராதவர்களைப் பார்த்து அழைப்பு விடுக்கின்றார்.

சுயஆய்வு

  1. நான் இறைமகனின் அழைப்பை உணர்க்கின்றேனா?
  2. அவரது அழைப்பு என்னில் விடும் உணர்வு யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே!உமது வார்த்தைகள் என்னுள்ளும் நான் உமக்குள்ளும் சங்கமிக்கும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு