அருள்வாக்கு இன்று

மே 12 - திங்கள்

இன்றைய நற்செய்தி

யோவான்.10:1-10

புனித நெரேபு, ஆக்கிலேயு, பஸ்கிராஸ்
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆனால் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன். யோவான்.10:10

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் தந்தையின் ஆணைப்படித் தன் மக்கள் நிறைநிலை வாழ்வுப் பெறும் பொருட்டு இந்த மண்ணகம் வந்தார் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார். சாத்தானின் பிடியில் சிக்கியிருந்த மானிடரை மீட்டெடுக்கும் பொருட்டே மனித அவதாரம் அதனை மனிதக் குலம் அறியும் பொருட்டுப் போதனைகள் மூலமாகவும் புதுமைகளின் மூலமாகவும் தன் பாடுகளினாலும் முக்கலத்திற்கும் முத்திரைப் பதித்துச் சென்றுள்ளார். இதனை நம் வாழ்வில் ஏற்போம் சிந்திப்போம.; செயலில் காட்டுவோம். நமது இடையே சாதி, சமயம், இனம், மொழி போன்ற ஆதிக்கத்தினால் கட்டுண்ட நாம் கடந்து சென்று சரித்திரம் படைப்போம் வாரீர்.

சுயஆய்வு

  1. இயேசுவின் உவமை என்னுள் ஏற்படுத்திய தாக்கம் யாது?
  2. அதனை எவ்வாறு செயல்படுத்துவேன்?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! அருள் வரங்களை நானும் சுவைத்து வாழ்வாக்கிடும் வரம் தாரும்.ஆமென்.

அன்பின்மடல் முகப்பு