அருள்வாக்கு இன்று

மே 11 - ஞாயிறு

இன்றைய நற்செய்தி

யோவான் 10:27-30

நல்லாயன் ஞாயிறு
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன."- யோவான் 10:27

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தி இயேசுவின் குரலுக்குச் செவிசாய்க்கும் அனைவரும் இயேசுவின் உண்மைச் சீடர்கள் என்ற கருத்தை எடுத்துரைக்கின்றது. நல்லாயனாம் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பதோடு மட்டுமல்ல, அதைச் செயலில் வாழ்ந்துக் காட்டுகின்ற மக்களாக இருக்க வேண்டும். நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் உலகில் சென்று பலன் தரும்படியாக நான் தான் உங்களைத் தேர்ந்துக்கொண்டேன் என்ற இயேசுவின் வார்த்தையைச் சிந்தித்துப் பார்த்தால் இறையழைத்தலின் மகிமையை நன்கு உணரலாம். இயேசுவின் அழைப்பை ஏற்று அவரது அடிச்சுவட்டில் வாழ நம்மையே இறைவனுக்கு அர்ப்பணிப்போம்.

சுயஆய்வு

  1. என் ஆயனின் குரலை அறிகிறேனா?
  2. இறைமகனின் அழைத்தலை அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே, உமது அழைப்பை ஏற்று உமது அடிச்சுவட்டில் வாழ வரம் தாரும். ஆமென்,

அன்பின்மடல் முகப்பு