அருள்வாக்கு இன்று
மே 9 - வெள்ளி
இன்றைய நற்செய்தி
யோவான் 6:52-59

யோவான் 6:52-59
வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். யோவான் 6:57
இன்றைய நற்செய்தியில் இயேசு வாழும் தம் தந்தையைக் குறிப்பிடுகிறார். இறைமகன் தன் தந்தை அதாவது பரம்பொருளாம் கடவுளை, முதலும் முடிவும் இல்லாத வரை, உருவமற்றவரை, காலங்களைக் கடந்தவரை இவ்வுலகமாந்தருக்கு அவரை வெளிப்படுத்தும் பொருட்டே இறைமகனாகத் தன் மகனை மரியின் வழியாக இவ்வுலகிற்கு அனுப்பினார். தன் மக்களின் துயர்களைத் துடைத்தார். என்றும் அழியாத உணவாகத் தன்னையே விட்டுச் சென்றார். நற்கருணையே மண்ணுலகப் பயணத்தின் உச்சக்கட்டம் நற்கருணை, அதனைத் தகுந்த ஆயத்ததோடு பெறும்போது நாம் இயேசுவில் சங்கமித்து அவரில் வாழ்வோம். அன்பு இயேசுவே! நான் உன்னில் இணைந்து வாழும் பேற்றிணை தாரும். ஆமென்.
அன்பு இயேசுவே! நான் உன்னில் இணைந்து வாழும் பேற்றிணை தாரும். ஆமென்.