அருள்வாக்கு இன்று

மே 4 - ஞாயிறு

இன்றைய நற்செய்தி

யோவான் 21:1-19

புனித ப்ளோரின்
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், "என்னைப் பின் தொடர்" என்றார். யோவான் 21:19

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு சீமோன் பேதுருவிடம் ”யோவானின் மகனான சீமோனே நீ என்னை அன்பு செய்கிறாயா?” என்ற மூன்று முறை கேட்கின்றார். காரணம் இறைமகனை யூதர் கூட்டம் சிலுவையில் அறைய கூட்டிக்கொண்டு போது ஒரு பெண்ணிடம் இவரை எனக்குத் தெரியாது என்ற மூன்று முறை மறுதலித்ததை நினைவு கூர்ந்து அவரது அன்பை புடமிட்டுப் பார்க்கின்றார். அதே வேளை ”என் திருச்சபைக்கு உன்னைத் தலைவராக நியமித்து உள்ளேன். எனது ஆடுகளைப் பேணி வளர்” என்று அழுத்தமாகக் கூறுகின்றார். இதே வேளை ”சீமோனே இளமையில் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்தாய். ஆனால் உன் முதுமையில் வேறொருவர் உன்னைக் கூட்டிக் கொண்டு விருப்பமில்லாத இடத்திற்கு அழைத்த செல்வர்” என்றார். அங்கே புனித பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிமைபடுத்தப் போகிறார் என்ற நிலையை முன்கூட்டியே பதிவு செய்கின்றார் இறைமகன்.

சுயஆய்வு

  1. இயேசுவின் அழைப்பு என்னைப் பின் தொடர் என்பதின் பொருள் அறிகிறேனா?
  2. அவரது அழைப்பு எனக்குத் தான் என்பதை அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது அழைப்பை ஏற்று அதன்படி பணியாற்றிட உமது ஆவியின் அருட்பொழிவை எனக்கு வழங்கிடும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு