அருள்வாக்கு இன்று
மே 2 - வெள்ளி
இன்றைய நற்செய்தி
யோவான் 6:1-15

யோவான் 6:1-15
இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள் ”உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றார்கள். யோவான் 6:14
இன்றைய நற்செய்தியில் உயிர்த்த இயேசுவை உண்மை இறைவாக்கினரின் இறைமகன் என்பதை ஆணித்தரமாக மக்கள் அறிந்துக் கொண்டனர். எப்படிஎனில் அங்குக் கூடியிருந்த பெண்கள் நீங்கலாக ஐயியாயிரம் பேர் உணவு உண்டு மீதம்; 12 கூடைகளில் நிரப்பியது. இந்தப் புதுமையைக் கண்டதும் மக்கள் இயேசுவை இறைமகன் என்பதை ஏற்றுக்கொண்டனர். அன்பர்களே நமக்கும் ஏதாவது புதுமைகள் நடந்தால் தான் உண்மை இறைமகனை அறிவோமா? அவரது உயிருள்ள இறைவார்த்தைகள் நம்மிடையே வழிபாட்டிலும் விவிலியத்திலும் நமது வாழ்விலும் தினசரி அரங்கேறிக் கொண்டிருப்பதை நாம் உணர வேண்டும். அப்படி அவரை உணர நம்மையே தூய ஆவியானவரின் ஆலயமாக மாற்றுவோம். சுவைப்போம் இறைபிரசனத்தை....
அன்பு இயேசுவே! இறைவார்த்தையில் இந்த அகிலமே அடங்கியுள்ளது. இதனைச் சுவைத்து வாழ்வாக்கிட எனக்கு வரம் தாரும். .ஆமென்.