அருள்வாக்கு இன்று

மே 17- செவ்வாய்

இன்றைய நற்செய்தி

இன்றைய புனிதர்

புனித பாஸ்கல் பேலோன்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னை விட பெரியவர். யோவான். 14:28

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் கண்ணுக்கு புலப்படாத தந்தையின் மாட்சிமையை தெளிவுபடுத்துகின்றார். காரணம் மக்கள் இறைவன் கொண்ட நம்பிக்கை குறைந்து பொய்யானவர்களின் வார்த்தைகளையும் பாகால் போன்ற தெய்வங்களை நம்பி தடம் புரண்டு சென்றார்கள். அவர்களை மீட்கவே உருவமற்ற இறைவன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் 33 ஆண்டுகள் மனித உறவில் வலம் வந்தார். எனவே தான் இயேசு தந்தை என்னை விட பெரியவர்.. நான் சொல்கின்றேன் மீண்டும் வருவேன். அனைவரும் அமைதியாகக் வாழுங்கள் என்கிறார்.

சுய ஆய்வு

  1. தந்தையின் மாட்சிமை மகனில் காண்கின்றேனா?
  2. இதனை மேற்கொள்ள எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! தந்தையின் அளவிடமுடியாத அன்பை உமது வழியாக நான் பெற்றுக் கொள்ள ஆசிர்வதியும். .ஆமென்.

அன்பின்மடல் முகப்பு