அருள்வாக்கு இன்று

மே 11-புதன்

இன்றைய நற்செய்தி

யோவான் 12:44-50

இன்றைய புனிதர்

லக்னோனி புனிதர் இன்னேசியஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைக் கடைப்பிடியாதவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குபவன் நானல்ல. ஏனெனில் நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன். யோவான் 12:47

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வார்த்தை நல்ல தீர்ப்பு அளிக்க வல்லது. தண்டனைத் தீர்ப்பு அளிக்க உலகிற்கு வரவில்லை. மாறாக உலகம் பொறாமை, அகங்காரம், பகைமை, போன்றவற்றினால் பிளவுபட்டும் சாதி, சமயங்களால் துன்புற்றும் ஏற்றதாழ்வுகளால் சிதறுண்டுக் கிடக்கும் வேளையில் தந்தையாம்கடவுள் தன் மக்கள் மீது கொண்ட பேரன்பால் தன் ஒரே மகனான அதுவும் சிலுவைச் சாவு ஏற்கும் அளவிற்கு இன்றைய நற்செய்திச் சான்றாக அமைகிறது. எனவே உலகில் நன்மையும் தீமையும் மாறிமாறி வரும். அதனை ஏற்று இறைவனது கட்டளைகளைக் கடைபிடித்து வாழவே இறைமகன் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்குச் சான்றாக அவரது வாழ்வு இந்த மண்ணகத்தில் அமைந்ததை நாம் நன்கு உணர்ந்திடும்வோம். அவரது வருகைச் சாதி- சமயம் -இனம் -மொழி இவற்றால் பிளவுபட்டிருந்த மானிடரை ஒன்றிணைக்கவே வந்தார். அனைவரும் ஒன்றாய் இருப்பார்களாக!

சுய ஆய்வு

  1. உலகு எப்படி இருந்தது? இருக்கின்றது?- அறிகிறேனா?
  2. இறைமகனின் மீட்பை உணர்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது மீட்பை நாங்கள் உணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு