அருள்வாக்கு இன்று

மே 10- செவ்வாய்

இன்றைய நற்செய்தி

யோவான் 10:22-30

இன்றைய புனிதர்

புனித டேமியன் ஜோசப் டி வீஸ்டர்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. யோவான் 10:27

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, எருசலேமில் சாலமோன் மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தார். அப்போது யூதர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருப்பது? நீர் மெசியாவானால் வெளிப்படையாகச் சொல்லிவிடும் என்றதும், இறைமகன் நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லிவிட்டேன். நீங்கள் நம்பவில்லை. தந்தையின் பெயரால் செய்யும் அறச் செயல்களே அதற்குச் சான்று. ஆனால் நீங்கள் நம்பாததால் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல. என் ஆடுகள் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கு அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன. நானும் அவற்றிற்கு நிலை வாழ்வை அளிக்கின்றேன் என்று நல்லாயனாக, ஆன்மீகவாதியாகப் பதிவு செய்கின்றார்.

சுய ஆய்வு

  1. ஆடுகளை நான் அறிகிறேனா?
  2. ஆயரின் குரலுக்குச் செவிசாய்க்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது குரலுக்குச் செவிச்சாய்க்கும் திறனை வழங்கிடும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு