அருள்வாக்கு இன்று

மே 9- திங்கள்

இன்றைய நற்செய்தி

யோவான் 10:1-10

இன்றைய புனிதர்

புனித பச்சோமியுஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன். யோவான் 10:10

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு நானே நல்ல ஆயன். என் ஆடுகள் என்னைப்பின் செல்லும் என்று நம்மைப் பார்த்து அறைகூவல் விடுக்கின்றார். நேர்மையான வாயில் ஆக இறைமகன் இருக்கின்றர். இவர் வழியாகச் செல்பவர்கள் அனைவரும் நிறைவாழ்வைப் பெறுவார்கள் என்று கிறிஸ்துவத்தின் மேன்மையைப் பதிவு செய்கின்றார். ஆடுகளாகிய நாம் அவரது மந்தைகள், அவரது பார்வையில் திரியும் ஆடுகள். நாம் நமது தீயப் பாதைகளைக் கடந்து இறை-மனித-உறவில் சங்கமாகும் போது அவரது கொட்டிலைச் சேர்ந்த ஆடுகளாக இருக்கின்றோம். இங்கே இறைமகன் நம்மை ஆடுகளாகச் செல்லமாகச் சித்தரிக்கின்றார். நல்ல ஆயனைத் தேடித் தானே ஆடுகள் பின் செல்லும் என்பதின் உச்சக்கட்டம் தான் மனித வாழ்வின் மைல்கல் என்பதை அறிவோம்.

சுய ஆய்வு

  1. ஆடுகளை நான் அறிகிறேனா?
  2. நல்ல ஆயனை அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது ஆடுகளாக நான் தொடர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு