அருள்வாக்கு இன்று

மே 5-வியாழன்

இன்றைய நற்செய்தி

யோவான் 6:44-51

இன்றைய புனிதர்

புனித ஆஞ்செலோ

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். யோவான் 6:47

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, தந்தையின் ஆணைப்படித் தம் மக்களைத் துன்பத் துயரிலிருந்து மீட்கும் பொருட்டு மரியின் மகனாகப் பிறந்து வளர்ந்துத் துன்பங்கள் பல அனுபவித்து மனிதகுலத்தை மீட்டார். தன் இறப்பினால் மானுடத்தை மீட்டார். தன் உயிர்ப்பினால் அனைவரையும் தன் தந்தையிடம் ஒப்படைக்கிறார். எனவே அவரை நம்புவோர் அனைவரும் நிலைவாழ்வுப் பெறுவர் என்பது உண்மை. எனவே மானிடராகிய நாம் என்றும் இறையாட்சியின் மதிப்பீடுகளைக் கண்டுணர்ந்து அதன்படி வாழ்வோமாகில் நிலைவாழ்வைப் பெறுவோம் என்பது திண்ணம்.

சுய ஆய்வு

  1. நிலைவாழ்வு என்றால் என்ன?
  2. அதனை அடைய என்முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் நிலையற்ற உலகில் நிலைவாழ்விற்கான அருள் வரங்களைச் சேகரிக்க ஆற்றல் தாரும். .ஆமென்.

அன்பின்மடல் முகப்பு