அருள்வாக்கு இன்று

மே 8 -சனி

இன்றைய நற்செய்தி

யோவான். 15:18-21

இன்றைய புனிதர்

 -St Maria Magdalen of Canossa

கேனோசா புனித மகதலேன்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, அன்று இறைமகனை மெசியாவாக ஏற்றுக் கொள்ளாத நிலையில் அவரது போதனைகளை, செயல்களை வெறுத்து அவரை கொன்றார்கள். ஏனெனில் அவர்கள் தந்தையை அறிந்து கொள்ளமுடியவில்லை. அவர்களை படைத்த இறைவன் அவர்களுக்கு மட்டுமே, அவர்களது உயர்ந்த குலத்தில் தான் மெசியா தோன்றுவார் என்ற கொள்கையே அவர்களிடம் மேலோங்கி நிற்கின்றது. எனவே இன்றும் இத்தகைய மக்கள் சாதி, சமயம், இன, மொழி வேறுபாடுகளால் பிளவுப்பட்டு இறைபோதனைகளை தவிர்த்து வாழ்கின்றார்கள். இத்தையோர் இயேசுவின் சீடர்களை இன்றும் புறக்கணித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

சுய ஆய்வு

  1. ஏற்புடமை என்றால் என்ன என்பதை உணர்ந்துள்ளேனா?
  2. அதனை பற்றி அறிந்துக் கொள்ள எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உம் தந்தையின் விருப்பத்தை பிரதிபலிக்கும் உமது மனதை எனக்கு தாரும். .ஆமென்.

அன்பின்மடல் முகப்பு