அருள்வாக்கு இன்று

மே 2-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

யோவான். 15:1-8

இன்றைய புனிதர்

-St Athanasius

புனித அத்தனாசியார்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, தன் உடனிருப்பை விளக்குகின்றார். அதாவது அவரது வார்த்தைகள் , போதனைகள், புதுமைகள் அல்லது பாடுகள் அனைத்து 33 வருடச் சாதனைகள் அனைத்தும் நமக்குள் பதிவுச் செய்துவிட்டால் நாம் அவருக்குள்ளும் அவரது செயல்கள் அனைத்தும் இணைந்து அவரது உடனிருப்பை உணர்ந்தவர்களாய் வாழ்வோம். அல்லது உண்மையான சீடர், சீடத்திகளாக வாழ்வோம். அப்படி நாம் இணைந்திருக்கும் போது தந்தையின் மாட்சிமை அதாவது கண்ணுக்குப் புலப்படாதத் தந்தையின் மாட்சி இறைமகனால் நிறைவு பெறும். இதனை அடுத்தவர்களுக்கும் பகிர்வோம் என்பதே பொருளாகும். இயேசுவின் உடனிருப்பு என்றுமே நம்மை இடையூறுகள் நம்மை அனுகாதபடி காக்கும் என்பதே உண்மை.

சுய ஆய்வு

  1. உடனிருப்பு என்றால் என்ன?
  2. இதனை உணர எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது உடனிருப்பு எனக்கு எத்தகைய மாட்சிமை நிறைந்தது என்பதை உணர்ந்துச் சுவைக்க வரம் தாரும். .ஆமென்.

அன்பின்மடல் முகப்பு