அருள்வாக்கு இன்று

மே 1-சனி

தொழிலாளர் புனித யோசேப்பு
இன்றைய நற்செய்தி

யோவான் 14:7-14

இன்றைய புனிதர்

St Joseph the Worker

புனித யோசோப்பு

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன். யோவான் 14:14

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு நீங்கள் என்னை அறிந்திருப்பீர்கள். இன்று முதல் என் தந்தையை அறிந்திருக்கின்றீர்கள் என்று இயம்பகின்றார். அதற்குப் பிலிப்பைப் போல நாமும் கேள்வித் தொடுக்க வேண்டாமே! எப்படி எனில் இறைவார்த்தை உண்மையுள்ளது. உயிருள்ளது. பாதளம் வரை பாய்ந்து மஞ்ஞையைத் துளைக்கக் கூடியது என்பதை உணர்ந்திருப்போமாகில் கிறிஸ்துவின் வருகைப் போதனைகள் சிலுவைப்பாடுகள் மரணம் உயிர்ப்பு வழியாக நாம் அவரை நற்கருணையில் அனுதினமும் தகுந்த தயாரிப்பில் உட்கொள்ளும்போது அவரது உடனிருப்பை நாம் உணர்கின்றோம் என்பதை என்னை அறிந்திருப்பவுர்கள் என் தந்தையை அறிந்திருப்பீர்கள் என்பதின் கருப்பொருளாகும்.எனவே தான் இறைமகன் என் பெயரால் எதைக் கேட்டாலும் உங்களுக்குச் செய்வேன் என்ற உறுதியாகப் பதிவு செய்கின்றார் இயேசுகிறிஸ்து.

சுய ஆய்வு

  1. இயேசுகிறிஸ்து அறிகிறேனா?
  2. அவர் பெயரால் கேட்பதைப் பெறுவேன் உணர்கிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உம் பெயரால் என் குடும்பச் சுமைகளை இறக்கி விடும் வரம் வேண்டி நிற்கின்றேன். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு