அருள்வாக்கு இன்று

ஏப்ரல் 28 - திங்கள்

இன்றைய நற்செய்தி

யோவான் 3:1-8

புனித லூயி மொன்போர்ட்
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர். யோவான் 3:6

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் உயிர்த்த இயேசு தூய ஆவியாரின் ஆற்றல் எத்தகையது என்பதை விளக்குகின்றார். தூய ஆவியானவர் தங்கு தடையின்றிச் சாதா இயங்குபவர். இவர் யாருடைய கட்டுபாட்டிலும் இயங்கதவர். காற்று எவ்வாறு தன் விருப்பம்போல் வீசுகின்றதோ அவ்வாறே அவரைக் கண்களால் காண முடியாது. ஆனால் அவரது உடனிருப்பு, அரிய பெரிய செயல்களைச் செய்யும் அவரின் ஆற்றலால் அடுத்தவர் உணர முடியும். எனவே இறைமக்களாகிய நாம் ஆவியானவரின் ஆற்றலுக்காய் உழைப்போம். செபிப்போம். கடந்து செல்லும் ஆற்றல் பெறுவோம்.

சுயஆய்வு

  1. தூய ஆவி என்னுள் செயலாற்ற என் முயற்சி யாது?
  2. அதனை அடைய என் முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது துணையாளரை என்னுள் அனுப்பி என்னைத் திடப்படுத்தியருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு