அருள்வாக்கு இன்று
ஏப்ரல் 26 - சனி
இன்றைய நற்செய்தி
மாற்கு 16:9-15

மாற்கு 16:9-15
இயேசு அவர்களை நோக்கி, ;உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். மாற்கு 16:15
இன்றைய நற்செய்தியில் உயிர்த்த ஆண்டவர் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்ற வேண்டுகின்றார். இறைமகன் மரியின் வழியில் இப்பூவுலகில் பிறந்து 30 ஆண்டுகள் பெற்றோருடன் வாழ்ந்தும் பகுப்பாய்வு செய்தும் மூன்று ஆண்டுகள் பொது வாழ்வில் ஈடுபட்டு தன்னை யூதர்களின் கையில் ஒப்படைத்து மரித்தார். மீண்டும் மாட்சிமையோடு உயிர்த்தெழுந்தார் என்ற நல்ல செய்தியை மக்களுக்கெல்லாம் பறைசாற்ற வேண்டும். அனைவரும் அறிய வேண்டும் என்பதே ஆண்டவரது அன்பு கட்டளை. இதனை நாம் உணருவோமா?
அன்பு உயிர்த்த இயேசுவே நான் உம்மை மற்றவருக்கு வெளிப்படுத்தும் வரம் தாரும் ஆமென்.