அருள்வாக்கு இன்று

ஏப்ரல் 25 - வெள்ளி

இன்றைய நற்செய்தி

மாற்கு 16:15-20

புனித மாற்கு நற்செய்தியாளர்
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இவ்வாறு அவர்களோடு பேசியபின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். மாற்கு 16:19

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களோடு பேசியபிறகு முழுச் சரீரத்தோடும், ஆன்மாவோடும் விண்ணகம் ஏறிச் சென்றார். அவர் விண்ணகத்தில் தன் தந்தையின் வலப்பக்கத்தில் அமர்ந்தார். அன்பர்களே கண்களால் காணமுடியாத இறைவன் தன் மக்கள்மேல் கொண்ட அன்பின் பொருட்டே அவர்களைக் குற்ற சுமையிலிருந்து விடுவிக்க விண்ணிலிருந்து மண்ணகம் நோக்கி மனித உருவம் தாங்கி இறங்கிவந்தார். இறைவனது சாயலில் மனுகுலம் படைக்கப்பட்டது. என்பதற்கு இறைமகனே சான்றாக அமைகின்றார். அனைவரும் இறைவனின் அன்பை எவ்வாறு சுவைக்க வேண்டும் என்பதற்கு இயேசுவே சாட்சியாக வாழ்ந்து பொறுமை, நீதி, நேர்மை, சமத்துவம், அன்பு, சகோதரத்துவம் ஆகிய இறையரசு வித்துக்களை நம்மிடையே ஊன்றிச் சென்றார். அதனை ஏற்போம்.

சுயஆய்வு

  1. நான் இறைவனின் வருகையை எவ்வாறு காண்கிறேன்?
  2. அதனால் என்னில் கண்ட மாற்றம் என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது பக்கத்தில் அமரும் பேறு எனக்கும் வழங்கி என்னை வழி நடத்தும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு