அருள்வாக்கு இன்று

ஏப்ரல் 24 - வியாழன்

இன்றைய நற்செய்தி

லூக்கா 24:35-42

புனித பிதேலிஸ்
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், "உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?" என்று கேட்டார். லூக்கா24:41

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களுக்க தோன்றி "அஞ்சாதீர் நானே தான்!" என்றார். தம் கைகளையும் காட்டி சொன்னபடி உயிர்த்து விட்டேன் என்று தம் சீடர்களிடம் வெளிபடுத்துகின்றார். அதேவேளை "உண்பதற்கு உங்களிடம் ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டு இரண்டு மீன்களை வாங்கி சாப்பிடுகின்றார். காரணம் இறந்து போனவரைக் காண்கிறோமே என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தமையால் அச்சம் நீக்கித் தம்மை வெளிப்படுத்துகிறார். அன்பர்களே! உயிர்த்த ஆண்டவர் நம்மோடு பயணிக்கின்றார். என்ற மனநிலை கொண்டு பாவமெனும் தீயை விட்டு இறைமகனின் உடனிருப்பை சுவைத்து வாழும் பேற்றினை அடைந்திடவும் இறை மனித உறவில் சுமுகமான உறவுகள் சாதி - சமயம் இனம் மொழி கடந்து பயணிப்போம் வாரீர்.

சுயஆய்வு

  1. உயிர்த்த ஆண்டவரின் ஆவியை உணர்கிறேனா?
  2. உண்பதற்கு ஏதேனும் உண்டா என்பவரை அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது உயிர்ப்பின் மேன்மையை உணர்ந்து வாழ வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு