அருள்வாக்கு இன்று
ஏப்ரல் 23 - புதன்
இன்றைய நற்செய்தி
லூக்கா 24:13-35

லூக்கா 24:13-35
அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்து போனார். லூக்கா 24:31
இன்றைய நற்செய்தியில் இயேசு எம்மாவு சீடர்களோடு பயணிக்கிறார். வழியில் அவர்கள் மரித்த இயேசு உயிர்த்துவிட்டார். நமது ஊர் பெண்கள் கண்டார்கள், வந்து சொன்னார்கள் என்று அவர்கள் கண்டதையும் கேட்டதையும் நம்பினார்கள் என்ற செய்தியைப் பரிமாறும் வேளையில் அவர்கள் இல்லத்திற்குச் சென்று பந்தியிலமர்ந்து அப்பத்தை எடுத்து இறை புகழ்பாடி பிட்டு அவர்களுக்குக் கொடுக்கும்போது அவர்கள் கண்கள் திறந்து கொண்டன. இன்று அவர்கள் உண்மையின் கடவுளைக் கண்டு மகிழ்ந்தார்கள். தாங்கள் கண்டவற்றை அனைவருக்கும் நற்செய்தியாய் அறிவித்தார்கள். மோசே முதல் இறைவாக்கினர் வரை தம்மைப் பற்றி முன்னறிவித்ததை அவர்களோடு நினைவு கூர்ந்தார்.
அன்பு இயேசுவே! என் அகக்கண்களைத் திறந்து உண்மையின் தெய்வத்தைக் காணும் வரம் தாரும். ஆமென்