அருள்வாக்கு இன்று

ஏப்ரல் 22 - செவ்வாய்

இன்றைய நற்செய்தி

யோவான் 20:11-18

புனித எப்பிபோடியுஸ், அலெக்சாண்டர் S
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவரிடம், "என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், "என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்" எனச் சொல்" என்றார். யோவான் 20:17

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு மகதலா மரியாவுக்கு தோன்றுகிறார். மகதலா மரியா ஆவலோடு என் ஆண்டவரை காண வேண்டும் என்று ஓடோடி சென்று கல்லறையைப் பார்க்கின்றார். அற்கே இரண்டு வானதூதர்கள் யாரை அம்மா தேடுகிறீகள் என்று கேட்க என் ஆணடவரை எடுத்துச் சென்று விட்டார்கள். என்று கதறியபடி நிற்க, இயேசு :மரியா" என்றார். மரியா திரும்பிப் பார்த்து "ரபூனி" என்றார். உடனே உயிர்த்த இயேசு என்னை இப்படிப் பற்றிக் கொள்ளதே. நான் என் தந்தையிடம் செல்ல வேண்டும் என்றார். நான் உயிர்த்துவிட்டேன் என்று என் சீடர்களிடம் போய்ச் சொல். கலிலேயாவில் அவர்கள் என்னைக் காண்பார்கள். மேலும் என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன் எனச் சொல் என்றார். ஒரு சீடத்தியாக மகதலா மரியா இயேசுவின் உயிர்ப்பை எடுத்தக் சொல்கிறார்

சுயஆய்வு

  1. என் ஆண்டவரைக் காண்டேனா?
  2. என்னைப் பற்றிக் கொள்ளதே என்பதன் பொருள் அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உம்மை பற்றிக் கொண்டு வாழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு