அருள்வாக்கு இன்று
ஏப்ரல் 21 -திங்கள்
இன்றைய நற்செய்தி
மத்தேயு 28:8-15

மத்தேயு 28:8-15
அப்பொழுது இயேசு அவர்களிடம், "அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்றார். மத்தேயு 28:10
இன்றைய நற்செய்தியில் இயேசு தன் உயிர்த்துவிட்ட செய்தியைத் தன் சீடர்களுக்குப் போய்ச் சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்று சொல்லி அனுப்புகிறார். இறந்த இயேசு சொன்னபடியே உயிர்த்துவிட்டார். கண்டதையும் கேட்டதையும் மக்களுக்குப் பறை சாற்றுங்கள். ஏனெனில் கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். ஆனால் கிறிஸ்து உயிர்த்ததை மக்கள் அறிந்து கொண்டால் உண்மைக் கடவுள் அவர் தான் என்று சான்றுப் பகர நேரிடும் என்ற ஆதங்கத்தில் ”இயேசுவை யாரோ திருடிச் சென்று விட்டார்கள்” என்று சொல்லுங்கள் என்று யூதர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். பேசிக் கொண்டபடிப் பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டார்கள். ஆனால் இது நாள்வரை இந்த வதந்தி யூதர்களிடையே பரவி வருகின்றது.
அன்பு இயேசுவே! உமது உயிர்ப்பு மண்ணுலகோருக்கு எழுச்சி என்பதின் பொருள் உணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.