அருள்வாக்கு இன்று

ஏப்ரல் 17 - வியாழன்

இன்றைய நற்செய்தி

யோவான்13:1-15

புனித ஸ்டிபன் ஆர்டிங்
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன் மாதிரி காட்டினேன். யோவான் 13:15

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் மண்ணுலக வருகையின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றார். காரணம் சட்டம் என்ற பெயரால் மனுகுலம் சீரழிக்கப் பட்டநிலையில் மனிதகுலத்தை வென்றெடுக்க வந்த இறைமகன் தன் பணிகளைப் போதனைகள் - சாதனைகள் -புதுமைகள் மூலம் செய்து காட்டி, தன் கடைசி விருந்தையும் அளித்தார். அந்த மக்களுக்குக் குறிப்பாகச் சீடர்களுக்கு எப்படி விருந்து அளிக்க வேண்டும் என்ற பங்கைக் கற்றத் தருகின்றார். அன்றும் இன்றும் விருந்துகளில் தாழ்ந்தவர் உயர்ந்தவர் என்ற நிலை உண்டு. அதனைச் சுட்டிக்காட்டவே தன் உடலையே வறியோராகிய தன் சீடர்கள் ஏற்றத் தாழ்வின்றி அனைவருக்கும் விருந்து அளிப்பது மட்டுமன்றி பணிவிடை செய்ய வேண்டும் என்பதை தான் இறப்பதற்கு முன்பு பணிவிடை பெற அன்று பணிவிடை புரியவே என்பதை வலிறுத்துகின்றார்.

சுயஆய்வு

  1. நான் கடந்து சென்று பணிவடை செய்யத் தயாரா?
  2. இதற்கு எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே!நான் எற்றதாழ்வின்றி அனைவருக்கும் பணிவிடை புரியும் வரம் தாரும். அமென்

அன்பின்மடல் முகப்பு