அருள்வாக்கு இன்று

ஏப்ரல் 16 - புதன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 26:14-25

புனித பெனடிக் லாபர்
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் 'ரபி நானோ?" என அவரிடம் கேட்க இயேசு, 'நீயே சொல்லிவிட்டாய்" என்றார்.மத்தேயு 26:25

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு எவன் காட்டிக் கொடுக்கப் போகின்றானோ அவனை அவன் வாயாலேயே உரைக்க வைத்தது தன் தந்தையே என்பதை உணர்ததார். எனவே தான் அவன் பேசிய "ரபி நானோ" என்றதை நீயே ஏற்றுக் கொண்டான் என்பதை உறுதிப்படுத்துகின்றார். ஆம் அன்பர்களே! நாம் மனம் பொருந்தி குற்றம் செய்யும்போது அந்தக் குற்ற உணர்வு மனதை உறுத்தும். அதனால் அடைந்தபலனும் பயனற்றுபோகும். அவன் எவ்வாறு மடிந்து போனானோ அதேபோல் கொடிய குற்றங்கள் செய்பவர்கள் மறைந்தனர். நம்மைப் படைத்த இறைவனின் மகனுக்கே இந்த நிலை என்றால் நாம் எம்மாத்திரம் சிந்தியுங்கள்...

சுயஆய்வு

  1. நான் பேராசைக் கொண்டுள்ளேனா?
  2. அப்படி எனில் அதைத் தடுக்க எனது முயற்சி என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் உலகப் பற்றைவிட உமது அன்பே மேலானது இதனை உணர்ந்து வறியவரிடம் காட்ட வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு