அருள்வாக்கு இன்று
ஏப்ரல் 15-செவ்வாய்
இன்றைய நற்செய்தி
-யோவான் 13:21-33,36-38

-யோவான் 13:21-33,36-38
அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். இயேசு அவனிடம், ;நீ செய்யவிருப்பதை விரைவில் செய் ; என்றார். யோவான் 13-27
இன்றைய நற்செய்தில் இயேசு தன்னை காட்டி கொடுப்பவன் யார் என்பதை வெளஜப்படுத்துகின்றார். அதே நேரம் அவனுக்குக் கட்டளை இடுகின்றார். நீ செய்ய விரும்புவதை விரைவில் செய் என்கிறார். யூதாஸ் இஸ்காரியோத் சாத்தானுக்கு அடிமையாகி விட்டான். அவன் தான் காட்டி கொடுப்பவன் என்பதை அவனையே உணரச் செய்கின்றார். ஆம் அன்பர்களே நாமும் பொன்னாசை, பொருளாசை என்று பேராசை எழும்போது நேர்தை, நீதி என்பவற்றை புதைத்துவிடுகின்றோம். சாத்தானுக்கு அடிமையாகின்றோம். அப்படிபட்டவர்ளையும் இயேசுவின் வார்த்தைகள் உணரவைப்பதை நாமும் உணர்வோம். மாற்றம் காண்போம்.
அன்பு இயேசுவே!இவ்வுலக வாழ்வு நிலையற்றது என்பதை உணர்ந்து பார்க்கும் வரம் தாரும்.ஆமென்.