அருள்வாக்கு இன்று

ஏப்ரல்14 - திங்கள்

இன்றைய நற்செய்தி

யோவான் 12:1-11

புனித திபுர்சியுஸ்
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஏனெனில் இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். யோவான் 12-11

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவினிடம் யூதர்கள் சிலர் நம்பிக்கை கொணடனர். காரணம் இலாசரை இயேசு உயிர்ப்பித்தார். எனவே அவரை உண்மை மெசியாவாக இருப்பார் என்ற நம்பிக்கையில் இருந்தனர். இதனை அறிந்த தலைமை குருக்கள் இலாசரையும் கொல்ல சதிதிட்டம் செய்தனர். அன்று யூதர்களே சிலர் இறைமகனின் செயல்களையும் வல்லமையும் உணர்ந்து இருந்தார்கள். எனவே சிலர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டனர். ஆம் சகோதரர்களே! நாமும் இறைவார்த்தையின்பால் நம்பிக்கையில் ஊன்றி நமது வாழ்வில் கடைபபிடிப்போம்

சுயஆய்வு

  1. இறைவார்த்தையை நான் உயிருள்ளது என்பதை உணருகின்றேனா?
  2. எனவே எனது வாழ்வில் ஏற்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் இயேசுவின் வார்த்தைகளை எனது வாழ்வில் ஒளிர வரம் தாரும்.ஆமென்.

அன்பின்மடல் முகப்பு