அருள்வாக்கு இன்று

ஏப்ரல் 13-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

லூக்கா 22:14-23:56

குருத்து ஞாயிறு
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி


குருத்து ஞாயிறு
அருள்மொழி:

அப்போது அவர் அவர்களை நோக்கி, “நான் துன்பங்கள் படுமுன் உங்களோடு இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலமாய் இருந்தேன். லூக்கா 22:15

வார்த்தை வாழ்வாக:

தவக்காலத்தின் கடைசி ஞாயிறும் குருத்து ஞாயிறுமான இன்று ஆண்டவருடைய பாடுகளின் தொடக்கம். வரலாற்றில் முதல் குருத்து ஞாயிறு அன்று நடந்தபோது சூறாவளி ஒன்று எருசலேம் நகரைத் தாக்கியது. காற்று வடிவில் வந்த சூறாவளி அல்ல, கடவுள் வடிவில், கடவுளின் திருமகன் வடிவில் வந்த சூறாவளி. இயேசு எருசலேமில் நுழைந்தபோது, மக்களால் எதேச்சையாக, மானசீகமாக ஊர்வலம் தானாகவே ஏற்பட்டது.
தந்தையாம் கடவுளின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை தான் சிலுவைப் பாதையில் பயணிக்க இயேசுவிற்கு எழுச்சியைத் தந்தது. நாமும் இயேசுவின் மீது நம்பிக்கைகொண்டும் நம் அன்றாடச் சிலுவைகளைத் தாங்கி இயேசுவைப் பின்தொடர்வோம். பாடுகளின் வழியாக உயிர்ப்பின் ஒளியைப் பெற இப்புனித வாரத்தில் உருக்கமாக வேண்டுவோம்.

சுயஆய்வு

  1. அன்றாடச் சிலுவைகளைத் தாங்கி இயேசுவைப் பின்தொடர என் முயற்சி யாது?
  2. தந்தையாம் கடவுளின் மீது நம்பிக்கை அதிகப்படுத்த எனது முயற்சிகள் யாது?

இறைவேண்டல்

என் அன்பு நேசரே! இயேசுவே, உம்மீது நம்பிக்கைக் கொண்டு அன்றாடச் சிலுவைகளைத் தாங்கி உம்மைப் பின்தொடரத் தேவையான அருளைத் தாரும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு