அருள்வாக்கு இன்று

ஏப்ரல் 12-சனி

இன்றைய நற்செய்தி

யோவான் 11:45-56

புனித ஜீலியஸ்-திருத்தந்தை
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

தம் இனத்திற்காக மட்டுமின்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார். யோவான்11:52

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இறைமகனை இந்தத் தலைமைகுருவாக இருந்த கயபா என்பவன் இறைவாக்காக உரைத்தான். அவனது சொல் இறைவனின் திட்டம் இறைமகன் வழியாக நிறைவு பெற போவதை உணர்த்துகின்றார். ஆம் அன்பர்களே! இறைவார்த்தையானது உயிருள்ள இயேசுவின் செயல்களை நமக்கு இந்தக் காலம் சிந்திக்க அழைப்பு விடுக்கின்றது. சாதி- சமயம் -இனம் மொழி போன்ற கூறுகளால் சிதறிகிடக்கின்ற நம்மை ஓன்றிணைக்கவே இயேசுவின் பலி உயர்ந்த பலி என்பதைஉணர்த்துகின்றது. எனவே நாமும் நமது வாழ்வில் இறைமதிப்பீடுகளைச் செயல்படுத்துவோம். வாரீர்.

சுயஆய்வு

  1. சிதறி கிடக்கின்ற மனிதர்களின் செயல்பாடு என்னில் உணர்த்தும் செய்தி யாது?
  2. இதனை ஏறேடுக்க எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே!பல பிளவுபட்டுள்ள இதயங்களே ஒன்றிணைக்கும் ஆற்றல் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு