அருள்வாக்கு இன்று
ஏப்ரல் 11-வெள்ளி
இன்றைய நற்செய்தி
யோவான் 10:31-42

யோவான் 10:31-42
ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்" என்றார். யோவான் 10:38
இன்றைய நற்செய்தியில் இயேசு, யூதர்கள் மெசியா என்று ஏற்க மறுக்கின்றனர். அவ்வேளையில் இறைமகன் மூன்று ஆண்டுகள் அவர் ஆற்றிய போதனைகள் அருளடையாளங்கள் -அருஞ்செயல்கள் எவற்றையும் ஓர் இறையுணர்வில் ஆற்றியிருக்கும் அனைத்தும் யூதர்களின் பாவப்பட்ட கண்களுக்குத் தெரியாமல் போனதை சுட்டிக்காட்டி, என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நம்பிக்கையின் பிரதிபலிப்பின் பயனாகத் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இணைந்திருப்பதை உணர்ந்துக் கொள்வீர்கள் என்று சாட்டையடி கொடுக்கின்றார். அன்பர்களே! இன்றும் அனேகர் இறைமையை உணர முடியாது அவர்களது பாவங்கள் மறைக்கப்பட்டுள்ளத. எனவே தான் இன்றும் ஆணாதிக்கம் போரட்டங்கள், தீவிரவாதம், குண்டுவெடிப்புகள் போன்ற தீயசெயல்களினால் மனித குலம் அழிந்து வருவதை உணர முடியும். என்வே இறைவார்த்தையின்படி வாழ்ந்து இறை -மனித -உறவில் மகிழ்வோம்.
அன்பு இயேசுவே! உமது செயல்களின்படி நான் அடுத்தவருக்காய் என்னையே அளிக்கும் வரம் தாரும். ஆமென்.